2025 ஜூலை 19, சனிக்கிழமை

சுதந்திரபுரத்தில் 3ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கை

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது  

அதனை அடுத்து குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் குறித்த பகுதியில் அகழ்வு செய்வதற்கான அனுமதி கோரப்பட்டு இருந்தது

அதற்கமைவாக, கடந்த 25ஆம் திகதி  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற அனுமதியோடு நேற்று (28) இரண்டாவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,  மூன்றாவது நாளாக இன்றும் (29) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது,  மண்டை ஓடு உள்ளிடட பல்வேறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X