2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுனாமி நினைவு தினம்...

S. Shivany   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பில்...

(செ.கீதாஞ்சன்)

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று(26) இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள சுனாமி நினைவாலயத்தில், வணக்க நிகழ்வுகள் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7.50 மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையின் போது உயிர்நீர்த்த உறவுகளை புதுக்குடியிருப்பில் அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்தில்  நடைபெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன்; விநோனோகராதலிங்கம் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர். 

கிண்ணியாவில் பிரார்த்தனை...

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியும் துஆப் பிரார்த்தனையும், இன்று (26) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் கிண்ணியா பீச் பூங்காவில் உள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் இடம் பெற்றது. 

இதில் கிண்ணியா உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா (நளீமி) உட்பட பலர் பங்கேற்றார்கள்.

(A.H.HASFAR HASFAR)

களுவாஞ்சிகுடியில் நினைவு தினம்.....
(வ.சக்தி )
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில், சுhனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு இன்று (26) காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மண்முனை தென்எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு  அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் அக்கட்சியின் உபதலைவருமான என். நகுலோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செய்து உயிரிழந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

மலையகமெங்கும் அஞ்சலி....

(எம்.கிருஸ்ணா)


ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவு தின நிகழ்வு  மலையகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது 
16 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அட்டன் நகர மணிக்கூட்டு சந்தியிலுள்ள சமன் போதியிலும் பௌத்த விகாரைகள்  இந்து ஆலயங்களிலும் கிறிஸ்தவ தேவ ஆயங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டதுடன், மஸ்கெலியா, பொகவந்தலா, நுவரெலியா, நகரங்கள்  மற்றும் பெருந்தோட்ட பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X