2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சுவிஸ் உதயத்தின் உதவிக்கரம்

Editorial   / 2022 ஜனவரி 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு, கல் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் சிறிய களி மண் வீட்டில் எந்த அடிப்படை வசதியும் அற்ற நிலையில் யானையின் தாக்குதல்கள் மத்தியில் வாழ்ந்து வந்த குடும்பத்துக்கே இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகத்தின் 08 இலட்சம் ‌‌‌‌‌ ரூ‌பாய் சொந்த நிதியில், இவ்வீடு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வீட்டை, பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில், நேற்று (09) நடைபெற்றது.

முடிந்தளவு வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்க புலம்பெயர்ந்துள்ளவர்கள் முன்வரவேண்டும் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் தொழிலதிபருமான க.துரைநாயகம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X