2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சேர்.பொன்.அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம்

Mayu   / 2024 ஜனவரி 09 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் "இலங்கையர்"  எண்ணக்கருவை "இலங்கையர்களின் தேவைகள்" என்ற வகையில்மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்த வேலைத்திட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025இற்கள் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செவ்வாய்க்கிழமை  (09)  நடைபெற்ற சேர்.பொன்.அருணாச்சலத்தின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக அவரது சிலை அமைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது. 

 

சேர்.பொன். அருணாச்சலத்தின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தாருடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

சேர்.பொன்.அருணாச்சலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த கொள்கையை பின்பற்றிய டீ.எஸ்.சேனநாயக்க அனைத்து இனத்தவரையும். மதத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார் என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .