2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சோழன் உலக சாதனை படைத்த சிறுமி

Editorial   / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு , கல்லடியைச் சேர்ந்த மாணவி செல்வி.காவ்யஸ்ரீ, (5 வயது 10 மாதங்கள்) கணக்குகளைச் செய்து காட்டி  சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்தார்.

இதற்கான நிகழ்வானது மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிரீன் கார்டன் ஹோட்டலில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் இன்பராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தலைவர் வரதகரன் போன்றோர். சோழன் உலக சாதனை படைத்த சிறுமிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவைகளை வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்முனை வடக்கு பிரதேச செயலர் திரு..வாசுதேவன் பங்கு கொண்ட அதேவேளை நிகழ்வை கதிரவன் .இன்பராசா  தலைமேயேற்று நடத்தினார்

இச்சிறுமி, மட்டக்களப்பு , கல்லடியில் வசித்து வரும் பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளாவார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .