R.Tharaniya / 2025 மே 19 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு இசிபத்தன கல்லூரி மற்றும் கண்டி திருத்துவ கல்லூரிக்கிடையில் கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கிடையிலான நொக்-அவுட் ரக்பி போட்டிகளின் இறுதிச் சமரை பார்வையிடுவதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.
வரலாற்றில் அதிக தடவைகள் ஜனாதிபதி ரக்பி கிண்ணத்தை வெற்றிக்கொண்டுள்ள இசிபத்தன கல்லூரி கடந்த வாரம் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரியை 24 -17 எனும் புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அத்துடன் சாதனையாக 29வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடிய இசிபத்தன கல்லூரி இம்முறையும் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இந்த நிகழ்வில் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரிய, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஷெமால் பெர்னான்டோ, கண்டி திருத்துவ கல்லூரியின் அதிபர் அரலிய ஜயசுந்தர, இசிபத்தன கல்லூரியின் அதிபர்
ஒஷான் பண்டிதரத்ன, டயலொக் ஆசியாடா நிறுவனத்தின் குழுக்களின் நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, வர்த்தக நாமம் மற்றும் ஊடகம் தொடர்பிலான குழுக்களின் முகாமையாளர் ஷர்ச சமரநாயக்க உள்ளிட்ட
அதிகாரிகளும் பாடசாலை ரக்பி சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு ரசிகர்கள் பலர் போட்டியை பார்வையிட வருகை தந்திருந்தனர்.










3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago