Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோக்கியோவில் நடைபெற்ற விழாவில் ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு இன்று (22) முடிசூட்டப்பட்டது.
ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126ஆவது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார்.
இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில், 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டுமழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆராவாரம் எழுப்பினர்.
பின்னர் பாரம்பரிய உடை அணிந்து வந்த நரிஹித்தோவுக்கு பேரரசராக முடி சூட்டப்பட்டார். அவருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வாழ்த்துரை வழங்கினார்.
முடிசூட்டு விழாவை தொடர்ந்து பிரமாண்ட விருந்து உபசார நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஹிகிபிஸ் புயல் தாக்கி ஜப்பானில் 80 பேர் உயிரிழந்ததால், முடிசூட்டு விழா கொண்டாட்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் மற்றொரு நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .