Mayu / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் புதிய அலுவலகம், கடந்த மார்ச் மாதம் (26) ஆம் திகதி மன்னார், பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், அப்பகுதிப் பெண்களுக்கான தையல் பயிற்சி நெறியும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெல்ஜியத்தில் வசித்து வரும் 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் ஸ்தாபகர் ஜெஜீவனின் வழிகாட்டலில், இலங்கையின் பல பகுதிகளில் இவ்வமைப்பினர் பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட 25 பெண்களுக்கு மூன்று மாத கால தையல் பயிற்சியை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்தப் பயிற்சிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

குறித்த பயிற்சியில் சுமார் 25 பெண்கள் வரை கலந்துகொண்டு, தையல் பயிற்சியை வெற்றிகரமாகத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.லெம்பேட்


15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago