Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
பின்னர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில் நினைவேந்தல் நடத்த பொலிஸார் தடை விதித்திருந்தனர்.
இருந்தபோதிலும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த இடத்திற்கு சென்றபோது பொலிஸார தடைவிதித்துள்ளனர்.
எனினும், வழமைபோல் நிகழ்வு செய்யும் அதே இடத்தில் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025