2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

தானாகவே திறந்த வான்கதவுகள்

Editorial   / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் கொத்மலை நீரேந்தும் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் புதன்கிழமை (26) காலை தானாகவே திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள வான் கதவுகள் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சென்கிளேயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்து  அதிகரித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X