Editorial / 2024 நவம்பர் 04 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு, ஹட்டன் வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்றது.
தேர்தல் பணிகளில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், அவ்வாறு விண்ணப்பித்த அலுவலர்களுக்கு வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டு, நிறுவனத் தலைவர் மற்றும் தேர்தல் ஆய்வாளர் முன்னிலையில் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு தபால் வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,727 என நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
(ரஞ்சித் ராஜபக்ஸ)


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .