2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தின் வாழ்த்து மழை...

Menaka Mookandi   / 2020 நவம்பர் 02 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் பதுளை மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளருமான செந்தில் தொண்டமானின் பிறந்தநாள், தமிழகத்திலுள்ள பல கிராமங்களில், சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட  10 மாவட்டங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், செந்தில் தொண்டமானின் பிறந்தநாள், விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பிரபல ஜல்லிக்கட்டு ஆர்வலரான செந்தில் தொண்டமானின் பிறந்தநாளையொட்டி, 20 அடி உயரத்துக்கு கட்அவுட் வைக்கப்பட்டு, அதற்கு முன்பாகப் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டதுடன், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், ஜல்லிக்கட்டு சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் வழங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஆர்வலரான செந்தில் தொண்டமான். தமிழ் கலாச்சாரத்துக்கு அளித்த பங்களிப்பு காரணமாக, தமிழகம், ஆந்திரா மற்றும் புதுவையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X