Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 07 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் இணைவழியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவரூபவ் யோகம உட்பட ஆறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு இல்லாமையால் குறித்தபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
இதனால் பாடசாலைகளில் நடாத்தப்படும் இணைய வகுப்புகளுக்கு பங்குகொள்வதற்காக அம்மாணவர்கள் வலையமைப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக தமது இருப்பிடத்திலிருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று கல்வியை தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதற்கு தீர்வாக அரசாங்கம் தொலைப்பேசி நிறுவனங்களுடன் தொடர்புக்கொண்டு, தொலைப்பேசிக் கோபுரங்களை அமைக்க உதவுமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025