Editorial / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தி விழாவும், ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும் போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் கிண்ணியா நகரசபை மண்டபத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், கிண்ணியா நகர சபை செயலாளர் முஹம்மது அனீஸ், கிண்ணியாவை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.வி.எம்.பெளண்டேஷன் உரிமையாளர் எம்.வி.எம்.பெளமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது, கடந்த பல வருடங்களாக ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய ஊடகவியலாளர்களுக்கு ஊடகர் விருதுடன் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும், மாவட்டத்திலும், பிரதேசத்திலும் நடக்கின்ற நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தொடர்ச்சியாக வழங்கி வந்த ஊடகவியலாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு சமூக தாரகை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறார்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அபு அலா






54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago