2025 மே 14, புதன்கிழமை

திறந்து வைப்பு…

Editorial   / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'பொதுமக்கள் சேவைப் பணியகம்' பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க ரீ.எம்.எம். அன்சார் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரின் எண்ணக் கருவில் உருவான இப் பொது மக்கள் சேவைப் பணியகத்தில் பிரதேச செயலகத்தை நாடிவரும் பொதுமக்கள் தத்தமது தேவைகளை ஒரே இடத்தில் நிறைவு செய்யும் பொருட்டு இப்பணியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பணியகத்தில் வாகன உரிமை மாற்றம்  வாகன வருமான பத்திரங்கள் வழங்கல், சமூக நல சேவைகள்,காணி தொடர்பான விடயங்கள், ஓய்வூதியம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற சேவைகளுக்காக வரும் பொதுமக்கள் விரைவாக தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.

இப்பணியக அங்குரார்ப்பண நிகழ்வில் உதவித் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், கணக்காளர் சர்தார் மிர்ஸா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எச். ஜெய்னுதீன் உட்பட காரியாலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். (படங்களும் தகவலும்- எம்.எப்.றிபாஸ்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .