2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

தொடவேண்டாம்...

Editorial   / 2021 மே 26 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரியும்  இரசாயனக் கப்பலிலிருந்த கொள்கலனொன்று, நீர்கொழும்பு துங்கல்பிட்டிய கடற்கரை ஓரத்தில் நேற்றிரவு கரை ஒதுங்கியுள்ளது.

சேதமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த கொள்கலனில், பொலித்தீன் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர நீர்கொழும்பின் சில பிரதேசங்களிலுள்ள கடற்கரையோரங்களில் இரசாயனப் படிவத் துகள்கள் மற்றும் திண்மப் பொருட்கள்  ஒதுங்கியுள்ளதாக பிரதேச வாசிகளும், மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ” எவரும் இப் பொருட்களை தொடவோ, எடுத்துச் செல்லவோ அல்லது திறந்து பார்க்கவோ வேண்டாமென”  பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X