Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 27 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
மறுநாள் (29) கொத்மலை, வேவண்டனிலுள்ள தொண்டமான் 'பங்களாவில்' மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அதன் பின்னர் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.
மே 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025