2025 ஜூலை 19, சனிக்கிழமை

தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டி...

Princiya Dixci   / 2020 நவம்பர் 04 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு பிரதேச செயலகக் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் விசேட பிரார்த்தனை நிகழ்வும், பிரதேச செயலாளர் ரி.ஜெ. அதிசயராஜ் தலைமையில், கல்முனை, இருதயநாதர் தேவாலயத்தில் இன்று (04) நடைபெற்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட பிரார்த்தனையை, தேவாலயத்தின் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் நடத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் தொற்றால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் பூரண குணமடையவும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

பிரார்த்தனையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி திருமதி ஜெனிதா தேவசந்திரன் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

(படங்கள் - ஏ.எல்.எம்.ஷினாஸ்)        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X