2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை போராட்டம் தொடரும்

Mayu   / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இலங்கை போக்குவரத்துச்சபையின் சாரதி ஒருவர் நேற்று (18) இரவு தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை  கைதுசெய்யுமாறு வலியுறுத்தி  இன்றைய தினம் (19)  இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு சாலை ஊடான அனைத்து பகுதிக்குமான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் நடத்துனர் உட்பட நான்கு பேர் இணைந்து இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும், படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதலுடன் தொடர்புப்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தினூடாக தண்டனைப்பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும், குறித்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நஸ்டத்தினை, தாக்குதல் நடாத்தியவர்களின் பஸ் உரிமையாளரிடம் பெற்று வழங்குமாறு கோரியும் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் அனைவரும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டடுள்ளனர்.

தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தாவிட்டால் நாளைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்துச்சாலைகளையும் மூடி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வா.கிருஸ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X