2024 மே 09, வியாழக்கிழமை

நயினாதீவு ராஜமஹா விகாரையில் கண்டி பெரஹரா

Freelancer   / 2023 நவம்பர் 01 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் புதன்கிழமை (31) திகதி கண்டி பெரஹரா ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றது.

கண்டிப் பெரஹரா ஊர்வலமானது நயினாதீவு அம்மன் ஆலய பின்புற வீதியில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து நயினாதீவு ராஜமஹா விகாரைவரை சென்று நிறைவடைந்தது 

இதில் கண்டிய நடனம், மயில்லாட்டம், ஒயில்லாட்டம், ஆதிவாசிகள் நடனம், இந்திய கதகளி நடனம், காவடியாட்டம், கோலாட்டம், குறவர் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடனான ஊர்வலம் இதன்போது இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண கடற்படைத்தளபதி கலந்துகொண்டார். அவர் நயினாதீவு ராஜ மஹா விகாரை இடம்பெற்ற பிரித் பாராயண சமய நிகழ்விலும் கலந்துகொண்டார்

இவ் பிரித்பாராயண சமய நிகழ்வினை வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி நாயக்க தேரர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கடற்படையினர்கள், இராணுவத்தினர்கள், பெளத்தகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X