2025 மே 12, திங்கட்கிழமை

நல்லூர் தேர்...

Editorial   / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 
 
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 
 
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.
 
இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
 
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.
 
நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. என்பது குறிபிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X