Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 20 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
வி.ரி.சகாதேவராஜா
பைந்தமிழ் உறவுப்பாலம் வேலைத்திட்டத்தின் கீழ் மண்டூர் 14 , சக்தி மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு புத்தகப்பைகள் உட்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் , கல்முனை றொட்டரிக்கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது .
கல்முனை றொட்டரிக் கழக தலைவர் ஏ. எல். ஏ. நாசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு Assist RR அமைப்பினால் அனுசரணை வழங்கப்பட்டுள்ளது .
போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
ஏ. எச். ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டம் , குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியொன்றை செவ்வாய்க்கிழமை (19) முன்னெடுத்துள்ளனர் .
நாவற்சோலை சிறுவர் வள நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பேரணியில், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், அரச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் உட்பட ஜநூறிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
107 வது வருட ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்
எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 107 ஆவது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (19) பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் .
சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டம்
யது பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டின் முதலாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (20) நடைபெற்றது.
இதன்போது, சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி , பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல், முன்பள்ளிகளுக்கான காலை உணவு வழங்குதல், கர்ப்பவதிகளுக்கான போசாக்கு பொதி விநியோகம், சுகாதாரம், பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள் , சட்டவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது .
வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை(20) நடைபெற்றுள்ளது .
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபய விக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் சின்னங்கள், சீருடைகள், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .
விநாயகர் புரத்திற்கு அரசாங்க அதிபர் விஜயம்
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான கூராய் சீது விநாயகர் புரம் கிராமத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் விஜயமொன்றை செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்டுள்ளார்.
குறித்த கிராமங்களின் கிராம சேவையாளர் சி.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் போது கிராமத்தை சுற்றி பார்வையிட்ட அரசாங்க அதிபர், கிராமத்து மக்களின் தேவைகளை கேட்டறிந்துள்ளார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago