2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நிவாரணம் வழங்குவதற்காக 800 கிலோகிராம் அரிசி அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டப் பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வரும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புக்கு, பொலனறுவை தெவிசனபர கிராம மக்கள், 800 கிலோகிராம் அரிசியை நிவாரண உதவியாக வழங்கியுள்ளனர். 

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, நாடளாவிய ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்தி, வறுமையில் வாடும் மக்களை இனங்கண்டு அங்குள்ள வசதியற்ற குடும்பங்களுக்கு, நுவரெலியா மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரக்கறி வகைகள், உலருணவுப் பொருள்களை நிவாரணமாக வழங்கி வருகிறது.

மலையகத்தில் கண்டி, மாத்தளை, ஹப்புத்தலை, நுவரெலியா  போன்ற பிரதேசங்களில், நிவாரண பொதிகளை வழங்கி வரும் இந்த அமைப்புக்கு வர்த்தகர்கள், பொது அமைப்பினர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், பொலனறுவை தெவிசெனபுர பிரதேச மக்கள்,  மலையக பெருந்தோட்ட பகுதியில்,  வறுமையில் வாழும் மக்களுக்காக 800 கிலோ கிராம் அரிசியை அன்பளிப்பாக குறித்த அமைப்புக்கு வழங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பொலனறுவை தெவிசெனபுர மக்களுக்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மரக்கறி வகைகளை, அண்மையில் கொண்டு சென்று வழங்கியுள்ளது.

இதனை வரவேற்ற தெவிசெனபுர மக்கள், இனங்களுக்கிடையிலான நற்புறவை வலுப்படுத்தும் வகையில்,  தெவிசெனபுர விகாராதிபதி ஊடாக, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் மக்களுக்கு, அரிசியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வழங்கப்பட்ட அரிசியை நிவாரணமாக வழங்கி வருவதாகவும் அத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் அமைப்பின் சிரேஷ்;ட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.மோகனராஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X