2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பசுமை அறிவொளி...

Editorial   / 2022 மார்ச் 07 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழற் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கோடு, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்துள்ள பசுமை அறிவொளி நிகழ்ச்சி, நேற்று (06) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில், கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தலைவருமான என்.ஆர்.லோகேந்திரலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வளவாளர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் மு. கனகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X