2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொடி மெனிக்கே நடனம்…

Editorial   / 2025 ஜூலை 18 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு செல்லும் பொடி மெனிக்கே ரயில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக வந்ததால், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல ரயில் நிலையத்திற்கு பயணிக்க வந்த வெளிநாட்டினர் குழுவினர். ரயில் வரும் வரை பாடல்களைப் பாடி நடனமாடினர்.

பொடி மெனிகே ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாகும் என்று நானுஓயா ரயில் நிலைய அதிகாரி தெரிவித்த பிறகு, நிலையத்தின் ஒரு முனையில் கூடியிருந்த அனைத்து வெளிநாட்டினரும் ரயில் வரும் வரை பாடல்களைப் பாடி நடனமாடினர்.

 பகல் 2:55 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டிய ரயில், மாலை 4.55 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்தை, வெள்ளிக்கிழமை (17) வந்தடைந்தது, ரயில் வரும் வரையில் வெளிநாட்டினர் குழு மகிழ்ச்சியுடன் இருந்தது. 

 ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X