2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பட்டதாரிகள் போராட்டம்

Mayu   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து  தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளானர்.



இதற்கமைய, கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .