2025 மே 17, சனிக்கிழமை

பட்டமளிப்பு விழா…

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான 13ஆவது உள்வாரி மாணவர்களுக்கான பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 156 மாணவர்களும் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 82 மாணவர்களும் பட்டத்தைப் பெற்றனர்.

அத்துடன், கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த 188 மாணவர்கள்  பட்டத்தைப் பெற்றனர்.

ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணி பட்டத்தை 03 பேரும் பெற்று, மொத்தமாக 1,013 பேர் பட்டங்களைப் பெற்றனர்.

இரண்டாம் நாள் அமர்வாக, இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கான பட்டமளிப்பு நிகழ்வு நாளை (17) நடைபெறவுள்ளதுடன், பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

(படங்கள் - எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான், ரீ.கே.றஹ்மத்துல்லா, கே.எ.ஹமீட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .