Editorial / 2024 ஒக்டோபர் 04 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில், வெள்ளிக்கிழமை (04) சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ். மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிதர்ஷன் வினோத்






4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago