2025 மே 16, வெள்ளிக்கிழமை

பதவியேற்பு

Kogilavani   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா மாநகரசபை புதிய உறுப்பினராக முன்னாள் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே,  நுவரெலியா மாநகரசபை ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான முன்னிலையில் சத்தியபிரமாணம் இன்று (10) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக இருந்த மோமட் பளீல் இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றிடத்துக்கு மஹிந்த தொடம்பே கமகே உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார். 

நுவரெலியா மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.யோகராஜா, ஜெயராம் வினோஜ், விஷ்னுவர்தன் மற்றும் முன்னாள் நுவரெலியா மாநகர பிரதிமுதல்வர் கிருஷ்ணசாமி சந்திரசேகரன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .