2025 மே 01, வியாழக்கிழமை

பனங்கட்டிக்குட்டான் விற்பனை அமோகம்

Mayu   / 2024 ஜூலை 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பைமுன்னிட்டு, ஆடிப்பிறப்புக்கான பொருட் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதற்கமைய, யாழ். நல்லூர், திருநெல்வேலி சந்தையிலும் பலசரக்கு வியாபார நிலையங்களிலும் ஆடிப்பிறப்புக்கான ஆடிக்கூழ் காச்சுவதற்காக பனங்கட்டி குட்டான், பயறு, அரிசி, மா, கஞ்சான், கஜூ, ஏலக்காய், பிளம்ஸ், முந்திரியவத்தல் போன்ற பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

யாழ். நல்லூர் திருநெல்வேலி சந்தையில் பெரிய பனங்கட்டி குட்டான் ஒன்றின் விலை 140, ரூபாவுக்கும் சிறிய பனங்கட்டி குட்டான் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என பனங்கட்டி குட்டான் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .