Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2021 ஜனவரி 29 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை, மன்னார் மறைமாவட்டத்துக்கு, இன்று(29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம்மேற்கொண்டர். செய்திருந்தார்.
மாலை 5.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்த அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை, மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச்சொரூபத்தில் ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து மன்னாருக்கு வருகை தந்த பிரதிநிதியை, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைமையிலான மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதனையடுத்து மன்னார் நகர பகுதியில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் வரை திறந்த வாகனத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீட பிரதிநிதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மன்னார் மறைமாவட்ட மக்கள் ஆகியோர் பவனியாக ஆலயம் நோக்கி சென்றனர்.
மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம்பெற்றதோடு நற்கருணை ஆசீர்வதமும் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
15 May 2025