Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 ஜனவரி 20 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களின் நெல் அறுவடை ,பொங்கல் நிகழ்வுகளின் பாரம்பரியங்களை எடுத்துக் காட்டும் வகையிலான நெல் அறுவடையும் பொங்கல் நிகழ்வும், திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி தலைமையில், வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (20) நடைபெற்றன.
இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி கோரல முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, அதிதிகள் வயலுக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து, பாரம்பரிய முறைப்படி தாக்கத்தினால் நெல்லறுத்து, நெற்கதிர்களை மாட்டு வண்டியில் ஏற்றி வந்தனர்.
அதன்பின் பூஜை வழிபாடுகள் செய்து அம்மில் வைத்து நெற்கதிர்களை அடித்து, உரலில் வைத்து நெல்லை இடித்து அரிசியாக்கி, பொங்கல் பானையில் வைத்து பொங்கச் செய்திருந்தனர். இந்நிகழ்வானது பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றிருந்தது.
இதன்போது வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விவசாய சங்கங்கள், சமூக அமைப்புக்கள் இணைந்து 100 பானைகளில் பொங்கல் பொங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - தீஷான் அஹமட்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago