Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் இவர் செயற்பட்டிருந்தார்.
அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/DeputySecState/status/1491544397141495813?s=20&t=z0w4NxdxDGa7alXRL5Bv9w
இவரின் நியமனம் அமெரிக்க-இலங்கை கூட்டுறவை முன்னேற்றுவதற்கு சரியான தேர்வாக அமைகிறது என அவர் குறித்த பதிவில் மேலும் கூறியுள்ளார்.
ஜூலி சுங், கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
7 hours ago