2025 ஜூலை 31, வியாழக்கிழமை

புதிய இயந்திர பாதை…

Editorial   / 2025 ஏப்ரல் 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்;போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக  ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ன சேகரவினால் இந்த சேவை இரண்டு போக்குவரத்து துறைகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 80மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு இரண்டு இயந்திரப்பாதைகளும் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.


இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் கருணைநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினையும் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளையும் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழி போக்குவரத்துச்சேவையாக குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் போக்குவரத்து பாதைகள் காணப்படுகின்றன.
இதன் ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும்,பாடசாலை மாணவர்களும்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

எனினும் கடந்த காலத்தில் சேவையிலீடுபட்டுவந்த இயந்திரப்பாதையானது மிகமோசமான வகையில் சேதமடைந்திருந்ததன் காரணமாக மக்கள் ஆபத்தான பயணத்தையே முன்னெத்துவரும் நிலையிருந்தது.
 

இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இதற்கான புதிய இயந்திர பாதைகள் வழங்கப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

இயந்திரப்பாதை சேவையில் செல்லாவிட்டால் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளுக்கு செல்வோர் சுமார் 20கிலோமீற்றர் தூரத்தினை கடக்கவேண்டிய நிலையில் பாதை சேவையூடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் தமக்கான பகுதியை அடையமுடியும் என மக்கள் தெரிவித்தனர்.
 

குருமண்வெளி-மண்டூரை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றிணை அமைப்பற்கு பல்வேறு அரசியல்வாதிகளும் அடிக்கல் நட்டுள்ளதுடன் பல உறுதி மொழிகளை வழங்கியபோதிலும் இதுவரையில் அதற்கான எந்த ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

வா.கிருஸ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .