Freelancer / 2023 நவம்பர் 14 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா வலயக் கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஹட்டன்- கொட்டகலை கிறிஸ்லஸ் ஃபார்ம் தமிழ் பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (14) முற்றாக நிறுத்தப்பட்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.


டெவோ நீர்வீழ்ச்சிக்கு நீரைக் கொண்டுச்செல்லும் கிளை கால்வாய்களில் ஒன்றான கிறிஸ்லஸ் ஃபார்ம் கால்வாய் கடந்த 10 ஆம் திகதி பிற்பகல் நிரம்பி வழிந்ததுடன் பாடசாலைக்குள் சுமார் 03 அடிக்கு மேல் நீர் நிரம்பியது.



கட்டிடங்களில் வண்டல் மண் படிந்துள்ளதுடன், பிரதேச கல்விப் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் இணைந்து பாடசாலையை செவ்வாய்க்கிழமை (14) துப்புரவு செய்தனர். இதனால், பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக அதிபர் தெரிவித்தார்.
இதனால் தங்கள் பள்ளி அருகே உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டுமென, அப்பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
36 minute ago
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
55 minute ago
3 hours ago