Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 19 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட C City பல்பொருள் அங்காடி நிலையத்தின் நிர்மாணப் பணிகள், கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக தலைமை அலுவலகர் யோஷித்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று (18) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு ஏற்பவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு இணங்கவும் பிரதமர் அலுவலக அதிகாரி யோஷித்த ராஜபக்ஷவின் முழு மேற்பார்யின் கீழ் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2012.11.26 அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 14 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும், கடந்த நல்லாட்சியின் போது இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
C City பல் பொருள் அங்காடி நிலையம் நிர்மாணித்ததன் பின்னர் வாடிக்கையாளர்கள் கட்டுமானத் துறையின் அனைத்து மூலப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago