2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

முதலமைச்சர்கள் - ஜனாபதி சந்திப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக,  அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) கலந்துரையாடினர்.

நாடாளுமன்றத்தில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார். மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.  

அதேபோன்று, மாகாண அமைச்சர்கள் தமது பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக, ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .