2024 மே 13, திங்கட்கிழமை

ம.ம.மு.வின் 35 வது ஆண்டு நிறைவு…

Editorial   / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையக மக்கள் முன்னணியின் 35 வது ஆண்டு நிறைவு விழாவும் பேராளர் மாநாடும் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் அமரர் சந்திரசேகரன் அரங்கில் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா,  கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவித் தூதுவர் டாக்டர்.எஸ்.ஆதிரா கட்சியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் எல்.விஸ்வநாதன் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் தாழமுத்து சுதாகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பேராளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நினைவாக நினைவு முத்திரை ஒன்றும் தபால் திணைக்களத்தால் இதன்போது வெளியிடப்பட்டது.முதலாவது முத்திரையை ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ச.டி.சில்வா பெற்றுக் கொண்டார்.

இதன்போது கட்சியின் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியவர்கள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மேலும் நுவரெலியா  மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் வளர்ந்துவரும் ஊடகவியலாளர்கள் என 37 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X