2025 மே 17, சனிக்கிழமை

மதுபான நிலையங்களில்...

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபான நிலையங்களில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் முன்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மதுபான நிலையங்கள், இன்று  (20)  ஆரம்பிக்கப்பட்டன.

எனவே, கல்முனை  சம்மாந்துறை பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் அதிக மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது ஆர்வத்துடன் மது கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

எனினும், அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார், குறித்த மதுப்பிரியர்களிடம் சமூக இடைவெளியை பேணுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

(பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .