2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாவீரர் தின நினைவேந்தல்  நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

உயிர் நீத்த  மாவீர்களை  நினைவு கூர்ந்து  இன்று  காலை  8.30 மணியளவில்    மன்னார் கரிசல்   கப்பலேந்தி மாதா  ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழுவின் தலைவர்  அருட்தந்தை  இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து  தீபம் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை,   மன்னார் மடு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வவுனியா நகர சபையின் முன்னாள் உப தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் இடம் பெற்றபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணியளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X