Editorial / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் இன்று (26) திங்கட்கிழமை (26) காலை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
-தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
-தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு சுடர் ஏற்றி, மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மத தலைவர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.





5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025