2025 மே 16, வெள்ளிக்கிழமை

மன்னாரில்…

Editorial   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

"மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்" எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க நிகழ்வும். கொரோனா விழிர்ப்புணர்வு செயற்பாடும் மன்னார் பள்ளிமுனை பாரம்பரிய நினைவுச்சின்னமான பெருக்க மர பகுதியில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் மதங்களுக்கு இடையில் காணப்படும் கசப்புணர்வுகளை எதிர்கால தலைமுறையினர் மறந்து நல்லிணக்க ரீதியில் மத சுதந்திரத்தை பயன்படுத்தும் விதமாக மும்மதங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் இணைத்து இந்நிகழ்வு இடம் பெற்றது .

இந்நிகழ்வில் பள்ளிமுனை கிராம மக்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மூன்று மதங்களையும் சேர்ந்த சிறுவர்களால் நல்லிணக்க சின்னமான புறாக்கள் பறக்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .