2025 மே 17, சனிக்கிழமை

மன்னாருக்கு மஹிந்த திடீர் விஜயம்

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.றொசேரியன் லெம்பேட்

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய,   இன்று (13) காலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றனுடன் கலந்துரையாடினார்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்க, மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வீதி நாடகம் இடம்பெற்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நாடகத்தை பார்வையிட்டார்.

சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக, மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில்  காலை 10.15 மணியளவில் குறித்த வீதி நாடம் இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .