Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 30 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மேற்கு தொகுதியில் உள்ள கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமாரின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள விராய் கெலி பல்சதார் அவர்கள் மற்றும் பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார உட்பட ஏனைய முக்கிய உறுப்பினர்கள் மற்றும் குழுவினர்களின் பங்களிப்பில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று மாலை விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், புதிய மாநகர சபை முதல்வராக பொறுப்பேற்றமைக்கு அவருக்கு இறை ஆசி வேண்டியதுடன் அவருக்கு பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார்ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்தினரால் மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி, நினைவுக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தசார் - இந்த ஆலயமும் ஆலய நிர்வாகமும், விசேடமாக இந்த கொட்டாஞ்சேனை வாழ் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் எம்மை இங்கு வரவேற்க ஒன்று கூடினர்.
பல்வேறு தனித்துவத்தை தன்னகத்தே கொண்ட நகரம் இந்த கொழும்பு மாநகரமாகும் இந்தத் தனித்துவத்தையும் இதன் மதிப்பையும் எமது நகரசபையும் எமது தலைமைத்துவமும் மதிப்பளிக்கின்றன. ஆகவே இந்த 'அன்பிற்கு நாங்கள் என்றும்நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago