2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’’மலையக தமிழர்’’ என பெயர் சூட்டவும்...

Editorial   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களாக நாமம் சூட்டி வாழ்ந்து வரும்  மலையக தமிழ் மக்களை தற்பொழுது பதிவு செய்யப்பட்டு வரும் குடிசன மதிப்பீட்டில் "மலையக தமிழர்" என பெயர் சூட்ட அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  கண்டி சமூக அபிவிருத்தி தாபனம் மற்றும் தோட்ட,கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் ஆகியவை இணைந்து நுவரெலியா மாநகரில் இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை (20) காலை முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் 250 க்கு அதிகமானவர்கள் கலந்து கொண்டு மும் மொழிகளிலும் தமது கோரிக்கைகளை எழுதிய பதாதைகளை ஏந்தி,கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் போது “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”,“எமது அடையாளம் மலையக தமிழர்”,“வீட்டுரிமை வேண்டும்”,“காணி உரிமை வேண்டும்”,“தவிர்க்காதே, தவிர்க்காதே தமிழ் மொழியை தவிர்க்காதே”,“தோட்ட வைத்தியசாலைகளை தரம் உயர்த்து”,  “பாகுபாடு காட்டாதே ” எனும் வசனங்களை எழுதி பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

அத்துடன் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பிறப்பு,இறப்பு உள்ளிட்ட சகல அரச ஆவணங்களிலும்  ‘இந்தியா வம்சாவளி’ என நாமம் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில்  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட உள்ள குடிசன மதிப்பீட்டு  நிரப்பப்படும்  படிவத்தில்  இந்தியா வம்சாவளி என்ற அடையாளத்தை மாற்றி "மலையக தமிழர்" என்ற பதம் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில் குடிசன மதிப்பீட்டு பத்திரத்தில் "மலையக தமிழர்" என்று பதிவு செய்ய வேண்டுமென்பதே எமது முக்கிய கோரிக்கையாகும்.

  பெப்பிரவரி (20)  உலக சமூக நீதி தினமாகும் இன்று "மலையகத் தமிழர்" என்ற இனக் குழுவை குடிசன கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் கண்டி சமூக அபிவிருத்தி தாபனம் ஈடுப்பட்டுள்ளது.

இதன் ஒரு கோரிக்கையை முன்வைத்தே போராட்டத்தை நுவரெலியாவில் முன்னெடுத்துள்ளோம் என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சமூக அபிவிருத்தி தாபன நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் யோகேஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில் பத்து பேர் அடங்கிய குழுவினர் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கையை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) டி.கே.கவிசேகரவிடம் கையளித்தனர். 

அதேவேளை, நகரத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகளும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை விசேட அம்சமாகும்.

எஸ்.கௌல்யா, ஆர்.ரமேஷ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X