2025 மே 14, புதன்கிழமை

மாட்டுவண்டி சவாரி …

Princiya Dixci   / 2022 மார்ச் 24 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, வற்றாப்பளை நந்திக்கடல் கரையில் அமையப்பெற்ற கண்ணகி மாட்டுவண்டி சவாரித்திடல் திறப்பு நிகழ்வு, நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 சவாரி திடல் திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து வட மாகாணத்தைச் சேர்ந்த மாட்டுவண்டி சவாரியாளர்கள் கலந்துகொண்டு, மாட்டுவண்டி சவாரிபோட்டி நடைபெற்றது. இதில் வட மாகாணத்தைச் சேர்ந்த 72 சோடி மாடுகள் பங்குபற்றியிருந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X