2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மார்கழிப் பெருவிழா

Mayu   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா புதன்கிழமை 25)  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டது.

இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்பலவாணர் அருள் வழிபாடு நடைபெற்று கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X