2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

மாலினியின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

Janu   / 2025 மே 27 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை சினிமாவின் ராணி’ என்று அழைக்கப்படும் மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்கு, சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன், திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்று, பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது. 

மாலினி பொன்சேகா சனிக்கிழமை (24) அன்று காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 78 ஆகும்.

மாலினி பொன்சேகாவின் பூதவுடல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் தங்களுடைய இறுதி அஞ்சலி செலுத்தினர். திரைப்பட பிரபலங்கள் உட்பட பலரும் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X