Janu / 2026 மே 04 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ அரச பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் நிகழ்வு, இன்று (04) திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பொலிஸ் குதிரைப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவேற்றார். இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழுமையான அரச கௌரவத்துடன் கூடிய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையையும் மாலைதீவு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
இரு நாட்டு அரச தலைவர்களும் கௌரவ மரியாதைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு அரச பிரதிநிதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதன்போது, மாலைதீவு ஜனாதிபதி அரச தலைவர்களுக்கான விசேட நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றை இட்டு கையொப்பமிட்டார்.
பங்கேற்ற முக்கியஸ்தர்கள்:
மாலைதீவு மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் அமைந்துள்ளது.





















47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago