Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2021 ஜூன் 06 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு, இதுவரையிலும் 16 பேர் மரணமடைந்துள்ளனர். மூவர் காணாமற் போயுள்ளனர்.
இயற்கை அனர்த்தங்களால், இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், சடலங்கள் நேற்று (05) மீட்கப்பட்டனர்.
வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வயது 34) மற்றும் 27 வயதான மகள் ஆகியோர் மரணமடைந்தனர்.
சம்பவத்தை அடுத்து விரைந்து சென்ற இராணுவத்தினரும், பொதுமக்களும், மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு நாயொன்று ஓடிவந்துள்ளது. எனினும், அங்கிருந்தவர்கள், அதனை விரட்டியடித்துவிட்டனர். எனினும், திரும்பி, திரும்பி வந்த அந்த நாய், மண்மேடு சரிந்திருக்கும் சேற்றுக்குள் செல்ல முயன்றது.
எனினும், திரும்பித் திரும்பி வந்தமையால், அந்நாய் என்னசெய்கிறது என பார்ப்போமென்று மீட்பு பணியாளர்கள் விட்டுவிட்டனர்.
அந்த நாய், தனது முன்னங்கால் பாதங்களால் ஓரிடத்தில் சேற்றைத் துடைக்கத் தொடங்கியது.
சேற்று மலைக்குள் புதையுண்ட குடும்ப உறுப்பினர்களை எங்கு தேடுவது என சிந்தித்துக்கொண்டிருந்த மீட்பு பணியாளர்களுக்கு அந்நாயே ஒரு துப்பு கொடுத்தது. அந்த இடத்திலிருந்த சடலங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நாய், சேற்று மலைக்குள் புதையுண்டு சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட செல்ல நாய் என்பதை பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.
(படம் பிரதீப் குமார தர்மரத்ன)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
45 minute ago